பால் கொழுக்கட்டை பொதுவாக விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் சுவை மிகுந்த இனிப்பான பால் கலவையாகும்.அனைவருக்கும் பிடித்தமான இந்த பால்கொழுக்கட்டை செட்டிநாட்டிலிருந்து பரவலாக்கப்பட்ட இனிப்பு வகையாகும்.சத்தான இந்த கொழுக்கட்டை வகையை சாயங்காலம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.நான் சிறு வயது முதல் மிகவும் ரசித்து ,சுவைத்து மகிழ்ந்தது அம்மாவின் கைவண்ணத்தில் இந்த பால் கொழுகட்டையே !!!.பேறுகால மாதங்களிலும் நினைத்து உருகியது இதற்காகவே !!!பால் கொழுகட்டை அம்மாவின் கைமணத்தில் ...
இந்த சுலபமான சுவையான பால் கொழுக்கட்டையை செய்துபார்த்து ருசிக்கவும்.
பால் கொழுக்கட்டை :
அரிசி மாவு உருண்டை தயாரித்து - பாலில் வேகவைக்கவும் - தேங்காய்ப்பால் சேர்க்கவும்சமைக்க தேவைப்படும் நேரம் : 45நிமிடம்
தேவையான பொருட்கள் :
* அரிசி உருண்டைகள் :
அரிசி மாவு 1கப்
தண்ணீர் 1 1/2கப்
நல்லெண்ணெய் / நெய் 3சொட்டு
உப்பு 1/4தேக்கரண்டி
* தேங்காய்பால் கலவை :
பால் 1 1/2கப்
தண்ணீர் 1 1/2கப்
சர்க்கரை 3/4கப்
தேங்காய்பல் 3/4கப் (+ 1/2கப் தண்ணீர் )
ஏலக்காய் 1/2தேக்கரண்டி
செய்முறை :
* அரிசி உருண்டை செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் நீர் ,உப்பு சேர்த்து கொதி வரும் வரை சூடேற்றி அடுப்பை அணைக்கவும்.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு சேர்த்து அதனுடன் சூடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியால் கிளறவும்.பின்பு மிதமான சூட்டிற்கு வந்ததும் கையால் பிசைந்து மாவு இருக்கமானதாகவும்,கையில் ஒட்டாமலும் வந்தவுடன் எண்ணெய்/நெய் சேர்த்து பிசைந்து வைக்கவும்.உள்ளங்கையில் சிறிதளவு மாவை வைத்து சிறு உருண்டைகளாக்கவும்.
[தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கிளறவும்,தண்ணீர் மீதமும் வரலாம்.]
* தேங்காய்ப்பால் கலவை :
2.பால் மற்றும் தண்ணீரை ஒரு அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து. சூடேற்றி கொதி வந்ததும் அடுப்பை குறைவான அளவில் வைத்து சமைக்கவும்.அரிசி மாவு உருண்டைகளை மெதுவாக பாலில் சேர்த்து 7-8நிமிடம் வரை வேகவிடவும்.
[பாலில் சேர்க்கும் முன் 2 அரிசி உருண்டைகளை தனியே எடுத்து வைக்கவும்.]
3.மிக்ஸி ஜாரில் 3/4கப் தேங்காயை எடுத்து கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.2மேஜைக்கரண்டி தேங்காய் துருவலை எடுத்து தனியே வைத்து விட்டு 1/2கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பின்பு தேங்காய்ப்பாலை வடிகட்டியில் பிரித்து எடுக்கவும்.
தனியே எடுத்து வைத்த 2உருண்டைகளை சிறிது தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கலந்து வைக்கவும்.
4.முதலில் உருண்டைகள் அடியில் தங்கியும் வெந்தபின் பாலில் மிதந்தும் காணப்படும்.வெந்ததை உறுதி செய்ய ஒரு உருண்டையை எடுத்து கத்தியால் இரு துண்டாக்கி பார்க்கவும்,நன்றாக வெந்த உருண்டை நிறம் மங்கியும்,வேகாதது உருண்டையின் நடுப்பகுதியில் பளீச் வெள்ளை நிறத்துடனும் காணப்படும்.
அதனுடன் சர்க்கரை,அரிசி மாவு கலவை சேர்த்து 2நிமிடம் வரை கொதிக்க விடவும்.
5.தேங்காய்பால் ,தேங்காய் துருவல்,ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
பால் கொழுக்கட்டை தயார் !!!

குறிப்பு :
1.தேங்காய்பால் அரைக்கும்பொழுது 2மேகைக்கரண்டி எடுத்து வைக்காமல்,தேங்காயை துறவியும் போடலாம்.
2.தேங்காய்ப்பால் சேர்த்தப்பின் ஓரிரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும் அல்லது தெரிந்து விடும்.
3.அரிசி உருண்டை வேகும்பொழுது மூடியை சிறிது இடைவெளிவிட்டு மூடவும் அல்லது பால் பொங்கி வழியும்.
4.சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம்(1கப்) சேர்க்கும் பொழுது தண்ணீர்,ஏலக்காய் சேர்த்து சூடேற்றி வெள்ளம் கரைந்தப்பின் அதை வெந்த அரிசி உருண்டைகளுடன் வடிகட்டி பின் சேர்க்கவும்.
5.அரிசி உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வேக வைத்தும் பாலில் சேர்க்கலாம் அல்லது இந்த முறை உபயோகித்து பாலில் வேகாவிடலாம்.
5.அரிசி உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வேக வைத்தும் பாலில் சேர்க்கலாம் அல்லது இந்த முறை உபயோகித்து பாலில் வேகாவிடலாம்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
பால் கொழுக்கட்டை பதிவை ஆங்கிலத்தில் காண Paal Kozhukattai .
Ithai read pannum pothey naakula echil ooruthu... senji sapdachi than muthal velai... Nalla thelivana azhagana kurippugal... nanri
ReplyDeleteநன்றி முத்தமிழ்
ReplyDeleteநன்றி முத்தமிழ்
ReplyDelete