ஓமவல்லி இலை / கற்பூரவல்லி இலை /
Omavalli Leaves / Ajwain Leaves / Country Borage
ஓமவல்லி பல மருத்துவ குணம் நிறைந்த செடியாகும்.பொதுவாக சளி ,இருமலுக்கு இந்த இலை மற்றும் விதையை ரசம்,கஷாயம்,சட்னி என எல்லாவற்றிலும் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.தண்ணீரில் இந்த இலை(8-10எண்ணிக்கை) அல்லது விதையை(ஒரு தேக்கரண்டி) சேர்த்து 10நிமிடம் கொதிக்க வைத்து அதை நுகர்வதால்(ஆவி பிடித்தல் / steam inhalation) சளி ,இருமலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.இந்த ஓம நீரை பருகுவதால் சளி மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும்.
ஓம விதையையும் கறி மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சமைக்கலாம்.இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் கொசு மற்றும் பூச்சித்தொல்லை இருக்காது.சிறு தண்டை நட்டாலே போதுமானது அது பரவலாக நிறைய இலைகளுடன் வளரும்.முடிந்த வரை வீட்டில் கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்தவற்றை உபயோகித்து நலம் பெறுவோம்.உணவே மருந்து என்ற கூற்றை நன்கறிந்து அடுத்த தலைமுறைக்கும் விதைப்போம்.
ஓமவல்லி இலை பஜ்ஜி :
ஓம இலையை கழுவி ,உலர்த்தி - பஜ்ஜி மாவில் நனைத்து - எண்ணெயில் பொரித்து எடுக்கவும் .
சமைக்க தேவைப்படும் நேரம் : 15நிமிடம்பரிமாறும் அளவு : 2-3பேர்
தேவைப்படும் பொருட்கள் :
ஓமவல்லி இலை 25இலை
கடலை மாவு 1/2கப்
அரிசி மாவு 1மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் 1மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் 3சிட்டிகை
சோடாப்பு 2சிட்டிகை
உப்பு 3/4தேக்கரண்டி
தண்ணீர் 1/2கப் + 2மேஜைக்கரண்டி
சூடான எண்ணெய் 1மேஜைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கேற்ப
செய்முறை :
1.ஓம இலையை நன்றாக கழுவி கிச்சன் துண்டில் அல்லது பேப்பரில் உலர்த்தவும்.
2.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு கரண்டியால் கிளறவும்.அதனுடன் 1/2கப் தண்ணீர்விட்டு கட்டியில்லாமல் கரண்டியால் கெட்டியாக கிளறி, பின்பு மேலும் சிறிது தண்ணீர்விட்டு பஜ்ஜி கலவையை தயார் செய்யவும்.பஜ்ஜி கலவை தோசை மாவு கலவைபோல் இருக்க வேண்டும்.
3.ஒரு அடி கனமான கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றவும்.எண்ணெய் சூடேறும்பொழுது பஜ்ஜி கலவையுடன் சோடாப்பு,சூடான எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறவும்.
ஓம இலையை பஜ்ஜி மாவில் நனைத்து எண்ணெயில் மெதுவாக போட்டு 30-40நொடி வரை அல்லது எண்ணெய் நுரை அடங்கியதும் கரண்டியின் உதவியுடன் திருப்பிப் போடவும்.பின்னர் 15நொடி வரை அல்லது பழுப்பு நிறமானதும் எடுத்து கிச்சன் பேப்பரில் வைக்கவும்.
சூடான ஓமவல்லி பஜ்ஜி தயார் !!!
தேங்காய் சட்னி ,தக்காளி கெட்ச்அ-ப் அல்லது சூடான டீ -யுடன் பரிமாறலாம்.
குறிப்பு :
1.பஜ்ஜி கலவை மிகவும் கெட்டியாகவோ அல்லது தண்ணீர்விட்டோ இல்லாமல் சரியான பிசத்தில் இருக்க வேண்டும்.
2.பஜ்ஜிக்கு மாவு தயார் செய்யும்போது முதலில் சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாக கட்டியில்லாமல் கரைத்து பின்னர் கொஞ்சம் தண்ணீர்விட்டு சரியான பதத்திற்கு கொண்டு வரவும்.
3.மிதமான தீயில் பஜ்ஜியை பொரித்தெடுக்கவும்.
4.இந்த கலவையில் வெங்காயம்,வாழைக்காய் ,கத்திரிக்காய் ஆகியவற்றையும் உபயோகித்து பஜ்ஜி தயார் செய்யலாம்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
No comments:
Post a Comment