
கேரட் அல்வா அனைவரும் விரும்பி சாப்பிடும் அல்வா வகையாகும்.பெரும்பாலும் புதிதாய் சமைக்க துவங்கிய அனைவரும் இதையே தேர்ந்தெடுப்பர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிடுவது கேரட் அல்வாவையே.சிறு வயதிலேயே அனைத்து காய்கறிகளையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதன் நன்மையறிந்து விரும்பி சாப்பிடுவதற்கு பழக்கவும்.
கேரட் கண் பார்வை கோளாறுகளை சரி செய்யவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை சீராக்கவும்,இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும்,நல்ல செரிமானத்திற்கும் உதவுகிறது.
கேரட் அல்வா / Carrot Halwa :
கேரட்டை துருவி - பால்,சர்க்கரையை சேர்த்து - வேகவிடவும்
சமைக்க தேவைப்படும் நேரம் : 40நிமிடம்
பரிமாறும் அளவு : 3பேர்
தேவைப்படும் பொருட்கள் :
நெய் 3மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு 4
பாதாம் 3
கேரட் 3கப் (3பெரிய கேரட் )
பால் 2கப்
சர்க்கரை 1கப்
உப்பு 1சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி 1/4தேக்கரண்டி (விரும்பினால் சேர்க்கவும்)
செய்முறை :
# கேரட்டை நன்றாக கழுவி,மேல் மற்றும் அடிப்பாகத்தை சிறிது நறுக்கி,கேரட்டை துருவ வேண்டும்.

1.ஒரு அடிகனமான கடாயில் நெய்,உடைத்த முந்திரி,பாதாம் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கி,தனியே எடுத்து வைக்கவும்.
2.அதே கடாயில் துருவிய கேரட்,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை(3நிமிடம்) வதக்கவும்.இப்பொழுது கேரட்டின் அளவு சிறிது குறைந்திருக்கும்.
3.பால் சேர்த்து நன்றாக வேகவிடவும்(8நிமிடம்).முழுவதும் அல்லது முக்கால் பாகம் பால் சுண்டும்வரை வேகவிடவும்.
4.சர்க்கரை சேர்த்து கிளறவும்.சர்க்கரை உருகி மேலும் நீர்த்து பின்பு சிறிது கெட்டியாக(5-7நிமிடம்) காணப்படும்.2மேகைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
5.ஓரிரு நிமிடங்களில் உள்வாங்கிய நெய் பிரிந்து வெளிவரும் அதோடு அல்வா கடாயின் ஓரத்தில் படாமல் நகர ஆரம்பிக்கும்.இதுவே சரியான அல்வா பதம்.ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி,பாதாமை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்..
சுவையான கேரட் அல்வா ரெடி!!!

குறிப்புகள் :
1.கண்டென்ஸ்ட் மில்க் (condensed milk ) அல்லது கோயா சிறிது சேர்த்தால் சுவை கூடுதலாகும்.
2.கேரட்டை பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
3.பாலில் காரட் முழுவதும் வெந்தபின்பே சர்க்கரை சேர்க்க வேண்டும்.
4.இந்த அல்வாவை குக்கரில் செய்து 3விசில் வரும் வரை வேகவிடலாம்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.