
காய்கறி சாதம் அனைவரும் விரும்பி சமைக்கும் ஒரு சுலபமான சாதமாகும்.காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து தேங்காய்ப்பாலுடன் சமைப்பதால் சத்து நிறைந்த உணவாகிறது.இந்த சாதத்தை அப்பளம்,வெங்காய தயிர் பச்சடி மற்றும் பக்கோடாவுடன் பரிமாறலாம்.பாஸ்மதி அரிசி மற்றும் சாப்பாடு அரிசி இரண்டும் உபயோகித்து செய்யலாம்,சிறிது தண்ணீர் அளவு மாறுபடும்.
காய்கறி சாதம் / Vegetable Rice :
அரிசியை ஊறவைக்கவும் - காய்கறியுடன் வதக்கி - குக்கரில் வேகவிடவும்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம்
{ அரிசி ஊறவைக்கும் நேரம் :
சாப்பாடு அரிசி - 10நிமிடம்
பாஸ்மதி அரிசி - 20நிமிடம் }
தேவையான பொருட்கள் :
சாப்பாட்டு அரிசி 1கப்
[பாஸ்மதி அரிசியும் உபயோகிக்கலாம்]
எண்ணெய் 1மேஜைக்கரண்டி
நெய் 1மேஜைக்கரண்டி
லவங்கம்/கிராம்பு 2
பட்டை 1/2"இன்ச்
ஏலக்காய் 1
பிரியாணி இலை 1
நட்சத்திர சோம்பு 1
பச்சை மிளகாய் 1
பெரிய வெங்காயம் 1
புதினா இலை 1கையளவு
தக்காளி 1
இஞ்சி-பூண்டு விழுது 1தேக்கரண்டி
காய்கறிகள் 1கப்
[கேரட் ,பீன்ஸ் ,பட்டாணி ,உருளைக் கிழங்கு,காலிஃப்ளார்]
தயிர் 1மேஜைக்கரண்டி
மஞ்சள் பொடி 1/4தேக்கரண்டி
மிளகாய் தூள் 1தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 2தேக்கரண்டி
தண்ணீர் 1கப்
தேங்காய்ப் பால் 1கப்
உப்பு 1தேக்கரண்டி
கொத்தமல்லி தழை 1/2கையளவு
[மிளகாய் தூள் ,கொத்தமல்லி தூளை தவிர்த்து பிரியாணி மசாலா 4தேக்கரண்டி சேர்க்கலாம்]
செய்முறை :
# அரிசியை கழுவி 10நிமிடம் ஊற வைக்கவும்.
# காய்கறிகளை நன்கு கழுவி வெங்காயம் ,பச்சை மிளகாய் ,தக்காளியை நீளவாக்கிலும், மற்றவை அனைத்தையும் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
# புதினா மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
# தேங்காய்ப்பாலை பிரித்தெடுக்கவும்.
1.குக்கரை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடேற்றி ,எண்ணெய் ,1/2தேக்கரண்டி நெய்,லவங்கம் ,பட்டை,ஏலக்காய்,நட்சத்திர சோம்பு,பிரியாணி இலை அனைத்தையும் சேர்த்து 1/2நிமிடம் வதக்கி பின்னர் பச்சை மிளகாய்,புதினா இலை,வெங்காயத்தை சேர்க்கவும்.வெங்காயம் பழுப்பு நிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து,மசியும் வரை வதக்கவும்.
2.இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் தயிர்,மசாலா பவுடர்,காய்கறி அனைத்தையும் சேர்த்து அடி பிடிக்காமல் 3நிமிடம் வதக்கவும்.
3.ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு,குக்கரில் சேர்த்து 2நிமிடம் உடையாமல் வதக்கவும்.தண்ணீர்,தேங்காய்ப்பால்,உப்பு சேர்க்கவும்.
4.கொதி வந்தவுடன் குக்கரை மூடி 2விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
நெய் (1/2தேக்கரண்டி),கொத்தமல்லி தழை சேர்த்து விரவி வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
சுவையான காய்கறி சாதம் தயார் !!!
குறிப்புகள் :
1.பாஸ்மதி அரிசி உபயோகித்தால் 1/2கப் தண்ணீர் மற்றும் 1கப் தேங்காய்ப்பால் சேர்த்து 2விசில் வரை சமைக்கவும்.
2.ஊறவைத்த அரிசியை நன்கு வடித்துவிட்டு வாணலியில் நெய் சேர்த்து 2நிமிடம் வதக்கி பின்னர் பிரியாணி செய்தால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் ,பளபளப்பாகவும் வரும்.
3,எலுமிச்சம்பழம் சாறு (1/2) சேர்த்து பரிமாறலாம்.
4.மிளகாய் தூள் ,கொத்தமல்லி தூளை தவிர்த்து பிரியாணி மசாலா 4தேக்கரண்டி சேர்க்கலாம்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பதிவை ஆங்கிலத்தில் காண Vegetable Rice.